Advertisement

தாராபுரம் அருகே 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே நிறுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம் அமராவதி பிரதான புதிய ஆயக்கட்டு கால்வாயில் கடந்த சிலநாட்களிக்கு முன்னர் தண்ணீர் திறக்கப்பட்டது.

9 நாட்களுக்கு தண்ணீர் திறக்க இருப்பதாக பொதுபணிதுறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

3 நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறுத்துவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், தளவாய்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன