தாமரைக்குள மதகு கட்டுமானத்தில் கருத்துவேறுபாடு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாமரைக் குளத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மதகை சபாநாயகர் தனபால் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவிநாசி தாமரைக் குளத்தில் மதகு அமைப்பது குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவியதால் கட்டுமானப் பணி பாதியிலேயே தடைபட்டது. இதையடுத்து கருத்து வேறுபாட்டை சரிசெய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் ஆலோசனை கூட்டம் நடத்த சபாநாயகரும், அமைச்சரும் உத்தரவிட்டனர். அடுத்தவாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மதகு பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!