தாங்கள் சாதித்தது என்ன? திரும்பி பார்க்க வேண்டும் என தோனி விமர்சகர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

மகேந்திரசிங் தோனியை விமர்சிப்பவர்கள், முதலில் தாங்கள் கிரிக்கெட்டில் சாதித்தது என்ன என்று சிந்தித்து பார்க்க வேண்டுமென இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

20 ஓவர் போட்டியில் இருந்து தோனி விலக வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனியை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று தெரிவித்தார். பீல்டிங், விக்கெட் கைப்பற்றுவது, பேட்டிங் என அனைத்திலும் தோனி தமது முழுத் திறனை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, ஒரு ஜாம்பவானைக் காப்பாற்ற வேண்டியது அணியின் கடமை என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன