இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஊதியத்தை உயர்த்தி வழங்க பிசிசிஐ மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு ஏழு முதல் 7.5 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு வழங்கப்பட்ட ஊதியமே ரவி சாஸ்திரிக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தனக்கான ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும் என்ற சாஸ்திரியின் கோரிக்கையை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் சாஸ்திரியுடன் பணியாற்றும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட இருப்பதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன