தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார் மெஹ்பூபா முஃப்தி

ஜம்மு – காஷ்மீர் மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, புத்த மத தலைவர் தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்றார். ஜம்மு – காஷ்மீரின் லே ((Leh)) நகரில் உள்ள புத்த மடாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

அங்கு நடைபெற்ற புத்த மத வழிபாடுகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மெஹ்பூபா முஃப்தி, தலாய் லாமாவிடம் ஆசி பெற்றார். அப்போது, இந்தியா – சீனா நாடுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொக்லம் விவகாரம் குறித்துப் பேசினார். பின்னர், இருவரும் கைகோர்த்தவாறு அங்கிருந்தவர்கள் முன் தோன்றினர். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய மெஹ்பூபா முஃப்தி, லே ((Leh)) பகுதியை உலகின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன