தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய அணிகள் வெற்றி

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

டி.என்.பி.எல். போட்டியில் நெல்லையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருவள்ளூர் மற்றும் திருச்சி அணிகள் மோதின. முதலில் களம் இறங்கிய திருவள்ளூர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் சதுர்வேத் 89 ரன்களும், சித்தார்த் 60 ரன்களும் விளாசினர்.

எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 57 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் அணி வெற்றி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற போட்டியில் காரைக்குடி மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதின. இதில் தூத்துக்குடி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களை குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன