தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் டெல்லியில் போராட்டம்

நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 2வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்,  100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று போராட்டத்தை தொடங்கினர்.

இன்றைய தினத்தில், போராட்டத்தை ஒடுக்க முயல்வதாக மத்திய அரசை கண்டித்து, கை, கால்களை இரும்பு சங்கிலியால் கட்டியவாறு, மண்டையோடுகளுடன் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன