தமிழக மீனவர்களின் 42 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை -மஹிந்த அமரவீர

தமிழக மீனவர்களின் 42 விசைப்படகுகளை, நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 143 படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. காங்கேசன்துறை, தலைமன்னார், நெடுந்தீவு உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று கொழும்பில் பேசிய இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். 2015ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வடமாகாண மீனவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். படகுகளை விடுவிப்பதற்கு முன்பு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் அமரவீரா தெரிவித்தார்.

153 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன