தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம்

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்ந்து 5-வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கடலூரில் ஆயிரத்து 520 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 164 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டத்துக்கு வந்தவர்கள் காவல் துறையினரின் தடுப்புகளை தகர்த்து முன்னேற முற்பட்டபோது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன் அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திருச்சியில் பெய்து வரும் மழைக்கு இடையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சமையல் செய்து, சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுட்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன