தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மாலை நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 8 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 6 சென்டி மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன