Advertisement

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 3 சென்டி மீட்டர் மழையும், விருதுநகரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம் என்று குறிப்பிட்டுள்ள ஆய்வு மையம், வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன