தமிழகம், புதுச்சேரியில் குழந்தைகள் தினம் உற்சாக கொண்டாட்டம்

தமிழகம் மற்றும் புதுவையில் குழந்தைகள் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி அரியாங்குப்பம் பாண்டுரங்கன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் நாராயணசாமி, 12 லட்ச ரூபாய் செலவில் 50 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும் என்று கூறினார். அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சின்னகண்ணுபுரத்திலுள்ள ஐ.சி.இ. கிங்ஸ் ஆஃப் கிங்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாணவர்களே ஆசிரியர்களாக மாறி, வகுப்புகள் எடுத்தனர். பாட்டு, நடனம் என உற்சாகமாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல்துறையினர், காவல்நிலையத்துக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து வந்து வித்தியாசமான முறையில் குழந்தைகள் தினத்தை கொண்டாடினர். காவல்நிலையம் வந்த பள்ளிக்குழந்தைகளுக்கு காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் இயங்கும் விதம் குறித்து விளக்கினர். இதனால் சிறு பிள்ளைகளுக்கு காவல்துறையின் மீதான தவறான அபிப்பிராயம் மாறும் என அவர்கள் கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன