தமிழகத்தை பாலைவனமாக்க ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டம்: ராமதாஸ்

மேலும் 110 இடங்களில் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 160 எண்ணெய்க் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், மேலும் 110 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசனப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களைச் சூழ்ந்துள்ள அத்தனை ஆபத்துக்களுக்கும் காரணம் திமுகவும், அதிமுகவுமே காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள் நலனை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அரசு அனுமதிக்காது என்று கூறிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது என்ன செய்யப்போகிறது? என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன