தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்குமாறு ஜேட்லியிடம் கோரிக்கை வைத்த ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி. கருத்தரங்குக்காக சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்க அளிக்க வலியுறுத்தியுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரு நண்பராகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் அருண்ஜேட்லி அஞ்சலி செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.

மிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தரவேண்டிய 17ஆயிரத்து 74 கோடி ரூபாயை விடுவிக்க வழிவகை செய்யுமாறு அருண்ஜேட்லியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

திமுக குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், கபட நாடகம் ஆடி டெல்லிக்கு காவடி எடுத்தது திமுகவின் பழக்கம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன