தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 2ஆம் நாளான நேற்றிரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள முத்தாரம்மன் சமேத குருசாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா மற்றும் 1008 லட்டு அர்ச்சனை நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பத்தர்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வாகையூரில் மழைவேண்டி மாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றது.

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தூய விண்ணேற்பு அன்னை ஆலய கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கரூரை அடுத்த நெரூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தில் 200 கலைஞர்கள் பங்கேற்ற நாத உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

கரூர் அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயத் தேர்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன