தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்பாக ஆய்வுசெய்ய மத்திய குழு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்பாக ஆய்வுசெய்ய பிரதமர் மோடி மத்திய குழுவை அனுப்பி வைக்க உள்ளதாக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், டெங்கு நிலைமை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார். டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அது வெற்றி பெற்றுவருவதாகவும் துணை முதலமைச்சர் கூறினார். டெங்குவை கட்டுப்படுத்த என்னென்ன தேவை என்பதை முடிவு செய்வதற்காக ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டை ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன