தமிழகத்தில் சிறைக்கைதி நல அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள சிறைக்கைதி நல அலுவலர் பணியிடங்களை 6 மாதத்தில் நிரப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த விஜய் பூமிநாதன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், 2010ஆம் ஆண்டு தமிழகத்தில் சிறைக்கைதி நல அலுவலர்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டும், இன்றுவரை நிரப்பப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

சிறைக்கைதிகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிவது, சிறைக்காலத்துக்குப் பின் சமூகத்துடன் இணக்கமாக வாழ வழிகாட்டுவது உள்ளிட்ட பல பணிகளை, பிற சிறை அலுவலர்களால் செய்ய இயலாது எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், சிறைக்கைதிகள் தங்கள் குறைகளை முன்வைக்க, சிறைக்கைதி நல அலுவலர்களை நியமிக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இதையடுத்து, அனைத்து மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் மற்றும் சிறைக்கைதிகளுக்கான பள்ளிகளில் சிறைக்கைதி நல அலுவலர்களை 6 மாதத்தில் நியமிக்க தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன