தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் இன்றும், நாளையும் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலோர பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சூழற்சி உருவாகியுள்ளதாக சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

மேலடுக்கு சுழற்சியால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும் என்றும் உள்மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.சென்னையை பொருத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன