தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை 2, 3-ஆக பிரிக்க வேண்டும் – ராமதாஸ்

தமிழகத்தின் பெரிய மாவட்டங்கள் அனைத்தையும் இரண்டு மூன்றாக பிரிக்கவேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராமதாஸ், மக்கள் தொகை குறைவாக இருந்தால்தான், குடிநீர், மருத்துவம், சாலை உள்ளிட்ட அரசின் சலுகைகள் விரைந்து கிடைக்கும் எனவும், அதற்காக பெரிய மாவட்டங்களை 2, 3-ஆக பிரிக்கவேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, தேனி, கரூர், திருவாரூர் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களை பிரிக்க வேண்டும் எனக்கூறிய ராமதாஸ், சென்னையை நான்காகவும் பிரிக்க வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன