தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வுகள் சிலவற்றைத் தற்போது காணலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ நிகழ்ச்சியின் முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன