Advertisement

தனியார் பால் நிறுவனங்கள் தரம்குறைந்த பாலை விற்பனை செய்து வருவதாக, ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஆரோக்கியா, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் தொடர்ந்து தரம் குறைந்த பாலையே விற்பனை செய்து வருவதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் விஜய், ஆரோக்கியா, டோட்லா மற்றும் விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் தரம் குறைந்த பாலையே தொடர்ந்து விற்பனை செய்து வருவதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற வழக்குக்கு முன்னர், பாலில் அதிக அளவில் ரசாயனப் பொருட்களை கலந்துவந்த தனியார் பால் நிறுவனங்கள், தற்போது சரியான அளவில் ரசாயனங்களை கலந்தாலும், அந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் அனைத்தும் தரங்குறைந்தவையே என்றும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன