தனிப்பட்ட சாதனைகளுக்காக கிரிக்கெட் விளையாடவில்லை – விராட் கோலி

தனிப்பட்ட சாதனைகளுக்காக கிரிக்கெட் விளையாடவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதை ஒட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த அணிக்கு எதிராக விளையாடவுள்ளோம் என்பதை விட, எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பது தான் முக்கியம் என்றார். அணியின் பலம் மற்றும் பலவீனத்தை மதிப்பிட வேண்டும் என்று கூறிய விராட் கோலி, எதிரணியை பொறுத்து பலத்தை கூட்டுவதா அல்லது குறைப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டுமென்றார். தனிப்பட்ட சாதனைகளுக்காக ஒரு போதும் விளையாடப் போவதில்லை என்றும், அதுபோன்ற எண்ணம் இயற்கையாகவே தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *