தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 139-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெமினி பாலத்திற்கு கீழே உள்ள பெரியாரின் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன