தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்-கொங்கு ஈஸ்வரன்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் உபரிநீர் சேமிப்பு கால்வாய் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அக்கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும், நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினால், தேவைக்கு அதிகமாகவே தண்ணீரை சேமிக்கலாம் என்று கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன