Advertisement

தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா விற்பனை – 9 மாதங்களில் 2,392 நபர்கள் கைது

தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றதாக, கடந்த 9 மாதங்களில், சென்னையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ், கஞ்சா, மாவா உள்ளிட்டவைகளை, தயாரிப்போர் முதல் குடோன்களில் பதுக்குவோர், பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வோர் வரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு, மாணவர்களிடம் போதைப் பழக்கங்கள் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள பகுதியில் தீவிரமாக கண்காணிக்கப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களில் மட்டும் இரண்டாயிரத்து 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டாயிரத்து 392 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சுமார் 72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 19ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் சந்தேகத்திற்குரிய இடங்கள், கிடங்குகளில் சோதனை நடத்தி ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்து, ஆயிரத்து 728 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன