தடைக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்ட உபேர் நிறுவனம்

உபேர் கால்டாக்சி நிறுவனம் லண்டனில் தங்களது சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாடைகைக் கார்களை ஆப் புக்கிங் மூலம் இயக்கி வரும் உபேர் நிறுவனம், லண்டன் நகரில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஓட்டுநர்களைக் கொண்டு தனது சேவையை நடத்தி வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறி, உபேர் கால் டாக்சிகளை இயக்க டிஎஃப்எல் என்ற லண்டன் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்தது.

இதையடுத்து லண்டன் விரைந்த உபேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தாரா கோஸ்ரோவ்ஹாஹி, அங்குள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதனிடையே, தங்களது சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உபேர் நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன