தங்கத்திற்கு மிகக்குறைவான வரி விதிப்பது சரியல்லை – பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன்

உணவுப் பண்டங்கள்மீது 18 சதவீத வரிவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கத்திற்கு 3 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது மிகக்குறைவானது என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வந்தர்களாலும் செல்வம் குவிப்பவர்களாலும் வாங்கப்படும் தங்கத்திற்கு மிகக்குறைவான வரி விதிப்பது சரியல்லை என்று மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு வரிச்சலுகை அளிக்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளையும் செல்வந்தர்களே அதிகமாகப் பெறுகின்றனர் என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன