Advertisement

டோக்லாம் பீடபூமி விஷயத்தில் சீனாவின் பொய்யை அம்பலப்படுத்தியது பூடான்

டோக்லாம் பீடபூமி விஷயத்தில் சீனா கூறிய பொய்யினை பூடான் அம்பலப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பூடான் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தங்களது எல்லைப்பகுதிக்குள் சீனா சாலை அமைத்தது அத்துமீறல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டோக்லாம் பிரச்னையில் ஜூன் 16ம் தேதிக்கு முந்தைய நிலைமை தொடரவேண்டும் என்று விரும்புவதாக பூடான் கூறியுள்ளது. மேலும் டோக்லாம் விஷயத்தில் சீன ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் பூடான் குற்றம் சாட்டி உள்ளது.

டோக்லாம் பிரச்னையில் இந்தியா, பூடானை தவறாக வழிநடத்துவதாக சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை எழுதிய தலையங்கத்தைக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், இதனால் இந்தியா தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன