Advertisement

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பயன்படுத்திய கார் திருட்டு

டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்பு பயன்படுத்திய கார் திருடப்பட்டுள்ளது.

அர்விந்த் கெஜ்ரிவால் நீல நிற மாருதி வேகன்-ஆர் காரில் பயணம் செய்வது வழக்கம். அவர் முதல் முறையாக டெல்லி முதலமைச்சராகி அரசு வாகனங்களை பயன்படுத்தமாட்டேன் எனக் கூறி தனது சொந்த காரிலேயே பயணித்த போதும், டெல்லி போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியபோதும் அந்த கார் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது அந்த காரை ஆம் ஆத்மி கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் வந்தனா சிங் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி தலைமைச் செயலக கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திருடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் கார் திருடப்பட்டதாக டெல்லி IP Estate காவல் நிலையத்தில் வந்தனா சிங் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன