டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

டெல்லி செங்கோட்டைக்கு குண்டுவைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நிதின்குமார் என்பவரது செல்போனில் பேசிய மர்ம நபர், பாகிஸ்தானைச் சேர்ந்த தாம் டெல்லி செங்கோட்டை, கன்னாட் பிளேசில் (Connaught Place) உள்ள ஓட்டலுக்கு வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், இரவு எட்டரை மணிக்கு வெடிக்கும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து பேகம்பூர் போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நிதின் குமாரின் செல்போனை பரிசோதித்ததில் மிரட்டல் அழைப்பு பஹாட்கஞ்ச்-சில் (Paharganj) உள்ள ஓட்டலிலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஓட்டல் மேலாளரான பீகாரைச் சேர்ந்த மெஹ்பூஸ் (Mehfuz) என்ற இளைஞர் விளையாட்டுக்காக இவ்வாறு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன