டெல்லி சாஸ்திரி பவன் கட்டிடத்தில் தீ விபத்து

டெல்லியில் பல்வேறு அமைச்சகங்கள் உள்ள முக்கிய அரசு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி சாஸ்திரி பவனில் மனிதவளமேம்பாட்டுத்துறை, தகவல் ஒளிபரப்புத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் உள்ளன.

இன்று காலை இந்த கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ அணைக்கப்பட்டதை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீயினால் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து எதுவும் தகவல் வெளியிடப்டவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன