Advertisement

டெல்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரும் மனு

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தக் கோரும் மனுமீது பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் 3 மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் ஆர்.கே.கபூர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதாலும், தூசு பறக்கும் சாலைகளாலும் டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதையும், சாலைகளில் தூசு பறப்பதையும் தடுக்கவேண்டும் என்றும், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்தி, சூரிய மின்சக்தி, பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அவசரநிலை போன்ற சூழல் நிலவுவதால், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை தேவை என்று கருத்து தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன