Advertisement
Advertisement

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு தொடரும் உயிரிழப்புகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குள்ளகாளிபாளையத்தைச் சேர்ந்த ஓவியா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை வைரஸ் காய்ச்சலுக்கு பலியானது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த குழந்தையை தாராபுரத்தில் உள்ள ஜபருல்லா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சல் குறையாததை அடுத்து, இன்று காலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குழந்தையின் உயிர் பிரிந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 7 வயது சிறுவன் ரித்தீஷ் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன் ரித்தீஷ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் சிகிச்சை பலனின்றி ரித்தீஷ் இன்று காலை உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கொரலநத்தம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஷானா, வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு பலியானார். கடந்த 5 நாட்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷானா உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள், கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பாலக்கோட்டில் உள்ள சுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சேலம் மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார்.

சென்னை முகப்பேர் மூன்றாவது பிளாக் பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரது 11வயது மகன் சந்தோஷ், டெங்கு காய்ச்சல் காரணமாக கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தும்பல் கிராமம் செல்வராஜ் என்பவரின் ஒன்பது வயது மகள் சத்யா டெங்கு காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிகிழமை மாலை உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் 6 வயது மகள் அனுஸ்ரீ காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிகிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன