டெங்கு காய்ச்சலுக்கு 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருச்சி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்சி புத்தூர் மதுரைவீரன் கோவில் தெருவில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகளான 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ராஜேஸ்வரிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரியின் உயிரிழப்பு, பாதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால், பலர் தங்களது வீடுகளைப் பூட்டிக்கொண்டு உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மாவட்ட நிர்வாகம் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன