டெங்கு காய்ச்சலால் வழக்கறிஞர் பலி – மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

தஞ்சையில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிர் இழந்த அரசு பெண் வழக்கறிஞரின் மரணத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் எனக் கூறி வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈ.பி காலணி பகுதியை சேர்ந்த அரசு வழக்கறிஞரான கவிதாவை உறவினர்கள், காய்ச்சல் காரணமாக அவர் லேடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்று காலையில் சிகிச்சைப் பலனின்றி கவிதா உயிரிழந்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கே வழக்கறிஞரின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன