Advertisement

டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழந்தாக குற்றம் சாட்டி உறவினர்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டத்தில் பிரசவித்த சில நிமிடங்களிலேயே இளம்பெண் டெங்கு காய்ச்சலால் உயிரிந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் குமரன் காலனியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான மெகராஜ் பானுவிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து சேலத்தில் உள்ள கே.ஏ.ராவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மெகராஜ்பானுவிற்கு சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே காய்ச்சல் அதிகமாகி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மெகராஜ் பானு உயிரிழந்தாகவும், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் 100க்கும் மேற்படோர் சேலம் அம்மாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியடைத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன