டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மானாமதுரை அருகே பி.குளம் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் காட்டு உடைகுளம் கிராமத்தில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது டெங்குவுக்கு பெண் உயிரிழந்து இருப்பது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன