Advertisement
Advertisement

டெங்கு ஒழிய, எடப்பாடி பழனிசாமி அரசு ஒழிய வேண்டும் : ஸ்டாலின்

டெங்கு ஒழிய வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டெங்கு அரசு ஒழிய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின், பாதாளச்சாக்கடை மூடி விஷவாயு அழுத்தத்தால் தூக்கி வீசப்பட்டதில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார். பெரம்பூர் லோகோ பகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு குப்பைகள் குவிந்திருந்ததை கண்டு அவரே அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

வில்லிவாக்கம் ரயில்நிலைய பகுதியிலும் குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்ட அவர், சீனிவாசபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன