டெங்குவிற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – டெங்கு இல்லை என அறிக்கை கொடுத்த தனியார் மருத்துவமனை மீது புகார்

அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிக்கை கொடுத்த பெண்ணிற்கு, டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என அறிக்கை கொடுத்த சேலம் தனியார் மருத்துவமனை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம்,சின்னமுதலைபட்டியை சேர்ந்த விஜயா என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக, முதலில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் காய்ச்சல் குறையாததால், உடனடியாக சேலம் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை விஜயா உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பெண் உயிரிழப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சூரமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன