டெங்குவால் உயிரிழப்பு இல்லை என்கிற நிலை உருவாக்கப்படும்: விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். டெங்குவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், டெங்குவால் உயிரிழப்புகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன