Advertisement

டெங்குக் காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சி சார்பாக பெரம்பூர் ரயில்நிலையம் முன்பு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடு, ஆட்டுக்கல், வாளி, டயர் ஆகியவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டு, தண்ணீர் தேங்கக் கூடாது எனவும், அவ்வாறு தேங்கினால், லார்வா புழு மற்றும் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகும் என்றும் விளக்கமளித்தனர்.

லார்வா புழு மற்றும் ஏடிஸ் கொசுவையும் காட்டியதோடு, டெங்கு நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரும் நிலவேம்பு குடிநீரையும் இலவசமாக வழங்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன