டி.டி.வி. தினகரன் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு – செல்லூர் ராஜூ

டி.டி.வி. தினகரன் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக முதலமைச்சருடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, மேலூரில் நடைபெறும் தினகரன் அணியினரின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, முதலமைச்சரிடம் பேசி முடிவை அறிவிப்பதாக கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன