டி.என்.பி.எல். திருவள்ளூர்- கோவை மோதிய போட்டியில் கோவை அணி வெற்றி

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூருக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கோவை அணி கடைசிப் பந்தில் வெற்றி பெற்றது. முதலில் களம் இறங்கிய திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அபராஜித் 60 ரன்களும், தன்வர் ஆட்டமிழக்காமல் 55 ரன்களும் எடுத்தனர்.

கோவை அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில், கடைசிப் பந்தில் அந்த அணி 197 ரன் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. முரளி விஜய் 69 ரன்களும், அனிருத் சீத்தாராம் ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!