டிவி-யை ஆஃப் செய்தால், ஓவியம் அல்லது புகைப்பட ஃபிரேமாக பயன்படுத்தலாம், சாம்சங் ஃபிரேம் டிவி அறிமுகம்

சாம்சங் நிறுவனம் ஃபிரேம் (Frame) என்ற பெயரில் ஓவியமும், தொலைக்காட்சியும் இணைந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுச் சுவர்களை அலங்கரிப்பதில், ஓவியமும், புகைப்பட ஃபிரேமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ஓவியங்களை நாள்தோறும் மாற்றிக்கொள்ளும் வண்ணம் சாம்சங் ஃபிரேம் தொலைக்காட்சி உதவுகிறது. டி.வி.யை ஆன் செய்தால். ஹெச்.டி. தொழில்நுட்பத்தில் துல்லியமான காட்சிகளை வழங்குகிறது. டி.வி.யை ஆஃப் செய்தால் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்த புகைப்படமோ, ஓவியமோ திரையில் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் C.E.S. சிறந்த புது கண்டுபிடிப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. சுவரோடு இருக்கும் சாம்சங் ஃபிரேம் டி.வி. கண்ணில் புலப்படாத வகையில் ஒயர்களைக் கொண்டுள்ளதால் அசல் புகைப்பட ஃபிரேம் போன்றே காட்சியளிக்கும். 55 இன்ச் த ஃபிரேம் டி.வி. 2 லட்சத்து 74 ஆயிரத்து 900 ரூபாய்க்கும், 65 இன்ச் கொண்டது 3 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன