Advertisement
Advertisement

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்ஜிஆரின் “அடிமைப்பெண்” வெளியீடு

48 ஆண்டுகளுக்கு பிறகு, நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியான எம்ஜிஆரின் அடிமைப்பெண் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஞாயிறன்று இத்திரைப்படத்தினை காண சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கு முன்பு ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். அப்போது எம்ஜிஆரின் படத்திற்கு பாலபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

தற்போதைய காலத்தில் இளம் நடிகர்களின் திரைப்படங்களுக்கே ஆரவாரம் இருக்கும் நிலையில், 1969 ஆண்டு வெளியாகி சக்கப்போடு போட்ட அடிமைப்பெண் திரைப்படத்திற்கு மீண்டும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன