டிச.7 -ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம், ஜாக்டோ – ஜியோ – கிராஃப் கூட்மைப்பினர் அறிவிப்பு

பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 7-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஜாக்டோ – ஜியோ – கிராஃப் அமைப்பி னர் அறிவித்துள்ளனர்.

அண்மையில் போராட்டம் நடத்திய ஜாக்டோ – ஜியோ அமைப்பின் ஒரு பிரிவோடு, அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கமான கிராஃப் (GREAF) தற்போது இணைந்துள்ளது. இந்த கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் சென்னை – திருவல்லிக்கேணியில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அதன் நிர்வாகிகள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 6-வது ஊதியக்குழுவின் முரண்களைக் களைவது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, ஜனவரி 6-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன