Advertisement

டாஸ்மாக் மதுபான கடை அமைக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம்

விழுப்புரத்தில் அரசு மதுபானக் கடை அமைக்க 50 ஆயிரம் ரூபாயை லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தனின் கடலூர் வீட்டில், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த முத்து, அப்பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் மதுபானகூடம் அமைக்க விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தனை, முத்து அணுகியுள்ளார்.

ஆனால் கடை அமைக்க முத்துவிடம் முகுந்தன் 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் முத்து புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுரையின் பேரில், இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்து கொடுத்தபோது, முகுந்தனை போலீசார் கைது செய்தனர். மேலும் முகுந்தனின் காரில் இருந்தும் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட டாஸ்மாக் மேலாளர் முகுந்தனின் கடலூர் வீட்டில், லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன