ஜோசியரின் பேச்சைக் கேட்டு 11 வயது சிறுவனை உயிரோடு புதைக்க முயற்சி – நரபலி கொடுக்க முயன்ற 7 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் ஜோசியரின் பேச்சைக் கேட்டு, 11 வயது சிறுவனை உயிரோடு புதைக்க முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து 11 வயது சிறுவனை கடத்திய கும்பல் ஜோசியரின் பேச்சைக் கேட்டு அவனை உயிரோடு புதைக்கத் திட்டமிட்டது. இவ்வாறு நரபலி கொடுத்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் என ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுவனை கர்நாடக மாநிலத்தில் நேரலே-ஹெம்மரகல்லா சாலை யோரம் இருந்த பண்ணையில் உயிரோடு புதைக்க முற்பட்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சிறுவனை மீட்டபோலீசார் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன