Advertisement

ஜேக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு எதிர்கொள்வதை பொறுத்தே தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன