ஜெர்மனியில் ஹிட்லரின்ஆதரவாளர்களும், எதிரணியினரும் பேரணி நடத்தியதால் பதற்றம்

ஜெர்மனியில் ஹிட்லரின்ஆதரவாளர்களும், எதிரணியினரும் ஒரே நேரத்தில் பேரணி சென்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஹிட்லரின் முக்கிய உதவியாளர் ருடல்ப் ஹெசின் (( rudolf hess )) 30 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது ஆதரவாளர்களான நியோ நாஜி அமைப்பினர் தலைநகர் பெர்லினில் பேரணி நடத்தினர்.

அவர்களுக்கு எதிராக சிலர் பேரணி சென்றதால், தலைநகரில் பதற்றம் நிலவியது. ஆயுதங்களுடன் அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான போலீசார் இரு பிரிவினரையும் தனித்தனியாக பிரித்தனர். அமெரிக்காவில் வெள்ளை இனவாத அமைப்பினரும், நியோ நாஜி இயக்கத்தினரும் அண்மையில் பேரணி நடத்தியபோது வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன